நகைச்சுவை நடிகை வித்யுலேகாவிற்கு விரைவில் திருமணம்

நகைச்சுவை நடிகை வித்யுலேகாவிற்கு விரைவில் திருமணம்

நகைச்சுவை நடிகை வித்யுலேகாவிற்கு விரைவில் திருமணம்

எழுத்தாளர் Bella Dalima

01 Sep, 2020 | 4:11 pm

பிரபல நகைச்சுவை நடிகையான வித்யுலேகாவிற்கு சஞ்சய் என்பவருடன் திருமணம் நிச்சயமாகி உள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானவர் வித்யுலேகா.

இதையடுத்து, தீயா வேல செய்யனும் குமாரு, ஜில்லா, வீரம், புலி, வேதாளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தமிழைவிட தெலுங்கில் அதிகப் படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல குணசித்திர நடிகர் மோகன் ராமனின் மகள்.

நடிகை வித்யுலேகா, ஊரடங்கு சமயத்தில் தனது உடல் எடையை வெகுவாகக் குறைத்து அனைவருக்கு அதிர்ச்சியளித்தார். இந்நிலையில், அவருக்கு சஞ்சய் என்பவருடன் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த மாதம் 26 ஆம் திகதி நடந்துள்ளது.

இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்