தனிப்பட்ட விழாக்களுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என வேண்டுகோள்

தனிப்பட்ட விழாக்களுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என வேண்டுகோள்

தனிப்பட்ட விழாக்களுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என வேண்டுகோள்

எழுத்தாளர் Staff Writer

01 Sep, 2020 | 7:23 pm

Colombo (News 1st) தனிப்பட்ட விழாக்களுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதற்காக நேரத்தை செலவிடுவதற்கு மேலதிகமாக, விழாக்கள், பரிசு வழங்கும் நிகழ்வுகள், திறப்பு விழாக்கள் போன்ற நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்கு எதிர்பார்க்கவில்லை என்பதால், அத்தகைய நிகழ்வுகளுக்காக ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்க வேண்டாமென அனைவரிடமும் கேட்டுக்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் நலனுக்காக அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கும், கீழ் மட்டத்திலுள்ள மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஜனாதிபதியின் அன்றாட உத்தியோகபூர்வ பணிகளுக்கு முக்கியத்துவமளிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மீதுள்ள அன்பு, மதிப்பின் காரணமாக அதிகளவானோர் தமது வாழ்வின் முக்கிய சந்தர்ப்பங்களில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுப்பதாகவும், மக்கள் தன் மீது வைத்துள்ள இந்த பற்றை ஜனாதிபதி பெரிதும் மதிப்பதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், உத்தியோகபூர்வ கடமைகளுக்கு புறம்பாக தமக்கு கிடைக்கும் அனைத்து சந்தர்ப்பங்களையும் மக்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்பதற்கு ஜனாதிபதி உறுதி கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்