சீன ரயில் பெட்டியுடனான போக்குவரத்திலிருந்து விலகல்

சீன ரயில் பெட்டிகளுடனான போக்குவரத்தில் இருந்து ரயில்வே சாரதிகள் சங்கம் விலகல்

by Staff Writer 01-09-2020 | 3:29 PM
Colombo (News 1st) சீன ரயில் பெட்டிகளுடனான ரயில் போக்குவரத்தில் இருந்து விலகியுள்ளதாக ரயில்வே சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இயந்திரக் கோளாறு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, நேற்று (31) நள்ளிரவு 12 மணி முதல் அமுலாகும் வகையில் சீன ரயில் பெட்டிகளுடன் கூடிய ரயில் போக்குவரத்தில் இருந்து விலகியுள்ளது. சீன ரயில் பெட்டிகளுடன் கூடிய ரயிலுக்கு பதிலாக வேறு ரயில் பெட்டிகளுடன் கூடிய ரயில் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் எந்த ரயில் சேவைகளும் இரத்து செய்யப்படவில்லை எனவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்