வடக்கில் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள மீன்பிடித் தொழில்

வடக்கில் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள மீன்பிடித் தொழில்

வடக்கில் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள மீன்பிடித் தொழில்

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2020 | 10:15 pm

Colombo (News 1st) வடக்கில் மீன்பிடித் தொழில் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய மீன்பிடிப் படகுகள் மீன்பிடிப்பதற்காக இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளமை தொடர்பிலான மாதாந்த அறிக்கையை சமர்ப்பித்த பாதுகாப்பு அமைச்சு, வடக்கின் மீன்பிடிக் கைத்தொழில் தொடர்பில் தகவல்களை வௌியிட்டது.

அதன்படி இந்த வருடத்தில் மாத்திரம் 4,356 இந்திய மீனவப் படகுகள் இலங்கை எல்லைக்குள் பிரவேசித்துள்ளன.

இதன்போது ஐவர் கைது செய்யப்பட்டுள்னர்.

2015 ஆம் ஆண்டில் இருந்து 71,609 இந்திய மீனவப் படகுகள் இலங்கை எல்லைக்குள் பிரவேசித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்போது 2,916 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 280 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்