மலையக மக்கள் முன்னணியிலிருந்து அனுஷா சந்திரசேகரன் நீக்கம்

மலையக மக்கள் முன்னணியிலிருந்து அனுஷா சந்திரசேகரன் நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2020 | 6:58 pm

Colombo (News 1st) மலையக மக்கள் முன்னணியின் அனைத்து பதவி நிலைகளிலிருந்தும் அனுஷா சந்திரசேகரன் நீக்கப்பட்டுள்ளார்.

ஹட்டனிலுள்ள கட்சி தலைமையகத்தில் இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ. லோரன்ஸ் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

கட்சியின் பிரதி செயலாளர் நாயகம் மற்றும் கட்சி அங்கத்துவத்திலிருந்து அனுஷா சந்திரசேகரன் நீக்கப்படுவதாக இதன்போது அவர் கூறியுள்ளார்.

கட்சியின் தேசிய சபை கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ. லோரன்ஸ் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகமாக அனுஷா சந்திரசேகரன் செயற்பட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்