தூதரக பணிகளுக்கான புதிய பணியாளர்கள் நியமனம்

தூதரக பணிகளுக்கான புதிய பணியாளர்கள் நியமனம்

தூதரக பணிகளுக்கான புதிய பணியாளர்கள் நியமனம்

எழுத்தாளர் Fazlullah Mubarak

31 Aug, 2020 | 8:07 am

தூதுவராலயங்களில் பணிக்கமர்த்தப்படும் புதிய பணியாளர்கள் விபரங்களை அனுமதிக்காக ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பியுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவிக்கின்றார்.

இதுவரை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மூலம் தூதுவராலய கடமைகளுக்காக சென்றிருந்த கடமைக் காலம் நிறைவடைந்தவர்கள் மீள நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தினால் நியமனம் வழங்கப்பட்ட பொருத்தமற்ற பலர் தூதரகங்களில் இருப்பதாக தெரிவித்த அமைச்சர், இதன்பிறகு அரச சேவையிலுள்ளவர்கள் மட்டுமே தூதுவராலய கடமைகளுக்காக இணைத்துக்கொள்ளப்படுவர் எனவும் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்