கோட்டாபய ராஜபக்ஸ – அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் இடையே தொலைபேசி மூலம் கலந்துரையாடல்

கோட்டாபய ராஜபக்ஸ – அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் இடையே தொலைபேசி மூலம் கலந்துரையாடல்

கோட்டாபய ராஜபக்ஸ – அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் இடையே தொலைபேசி மூலம் கலந்துரையாடல்

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2020 | 3:42 pm

Colombo (News 1st) அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் T. எஸ்பர் (Mark Esper),  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

COVID – 19 தொற்று நிலைமையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியமை மற்றும் பாராளுமன்ற தேர்தலை வெற்றிகரமாக முன்னெடுத்தமை தொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அனைத்து இன மக்களினதுடன் இறைமையை பாதுகாக்கும் வகையில் சுதந்திர மற்றும் திறந்த இந்து – பசுபிக் கொள்கைக்காக அர்ப்பணிப்பதன் முக்கியத்துவம் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

அத்துடன், இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் விடயத்தில் தொடர்ச்சியான முன்னேற்றம் குறித்தும் மார்க் எஸ்பர் வலியுறுத்தியுள்ளார்.

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன் இராணுவ தொழில்மயமாக்கல், பயங்கரவாத ஒழிப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்துவது தொடர்பிலும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் டாக்டர் மார்க் T. எஸ்பர் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்