அமெரிக்காவில் 6 மில்லியனை அண்மித்த கொரோனா நோயாளர்கள்

அமெரிக்காவில் 6 மில்லியனை அண்மித்த கொரோனா நோயாளர்கள்

அமெரிக்காவில் 6 மில்லியனை அண்மித்த கொரோனா நோயாளர்கள்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

31 Aug, 2020 | 3:34 pm

Colombo (News 1st) அமெரிக்காவில் கொரோனா நோயாளர்களின் எண்ணக்கை 6 மில்லியனை அண்மித்துள்ளது.

கடந்த 4 நாட்களுக்குள் உலகளாவிய ரீதியில் ஒரு மில்லியன் பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உலகில் முதற்தடவையாக 78,000 இற்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் இந்தியாவில் பதிவாகியிருந்தனர்.

​ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின் அடிப்படையில், அமெரிக்காவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 59,94,855 ஆக பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் மினிசொட்டா, அயோவா, வடக்கு டகோட்டா, தென் டகோட்டா உள்ளிட்ட பிராந்தியங்களில் அதிக நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்நாட்டில் 3 வாரங்களுள் 5 மில்லியன் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்