அநுருத்த சம்பாயோ உள்ளிட்ட நால்வருக்கு பிணை 

அநுருத்த சம்பாயோ உள்ளிட்ட நால்வருக்கு பிணை 

அநுருத்த சம்பாயோ உள்ளிட்ட நால்வருக்கு பிணை 

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2020 | 4:43 pm

Colombo (News 1st) நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ள பல்வேறு முறைகேடுகள் மற்றும் சிறைச்சாலைக்குள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கின் சந்தேக நபரான நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அநுருத்த சம்பாயோ உள்ளிட்ட நால்வர் கடுமையான நிபந்தனையின் கீழ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு பிரதம நீதவான் ரஜிந்த்ரா ஜயசூரிய இன்று (31) காலை பிணை வழங்கி உத்தரவிட்டார்.

சந்தேக நபர்கள் நால்வரும் வௌிநாடு செல்ல தடை விதித்த பிரதம நீதவான், சந்தேக நபர்கள் மாதாந்தம் முதலாம் மற்றும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

பிணையில் விடுதலையான பின்னர் முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சியாளர்கள் அல்லது விசாரணையாளர்களுக்கு இடையூறு விளைவிக்கக்கூடாது என இதன்போது சந்தேக நபர்களுக்கு உத்தரவிட்ட நீதவான் எதிர்வரும் 4ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்