முள்ளியவளையில் தொல்லியல் பொருட்களுடன் மூவர் கைது

முள்ளியவளையில் தொல்லியல் பொருட்களுடன் மூவர் கைது

by Staff Writer 30-08-2020 | 9:57 AM
Colombo (News 1st) முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் தொல்பொருள் பெறுமதியான சில பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினரால் நேற்று (29) பிற்பகல் 2 மணியளவில் வீடொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது, தொல்பொருள் பெறுமதி வாய்ந்ததாக சந்தேகிக்கப்படும் வலம்புரியொன்றும் பல்வேறு எடை கொண்ட 10 மாணிக்கக்கற்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. வவுனியா, முள்ளியவளை ஆகிய பகுதிகளை சேர்ந்த 20, 24 மற்றும் 37 வயதானவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் மூவரும் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.