திபெத்துக்கு தடுப்புச் சுவர் - சீன ஜனாதிபதி

திபெத்துக்கு தடுப்புச் சுவர் வேண்டும் - சீன ஜனாதிபதி

by Fazlullah Mubarak 30-08-2020 | 4:50 PM

திபெத்தின் இறையான்மையை காக்கும் நோக்கில் தடுப்புச் சுவர் ஒன்று நிருவப்படல் வேண்டும் என சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இது உடைக்கப்பட முடியாத ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே சீன ஜனாதிபதியின் நிலைப்பாடு. சீன ஜனாதிபதி ஷீ ஜின்பின் தெரிவித்துள்ள கருத்துக்களுக்கமைய இனவாதத்துக்கு எதிராக தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தல் அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. 1950 களில் திபெத் நாட்டை கைப்பற்றிய சீனா அதனை நியாயப்படுத்தி அடிமைத்தனத்திலிருந்து பிரிந்து நிற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது. எவ்வாறாயினும் திபெத் தமது இளையான்மையை பாதுகாக்க பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ள சீன ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.