கண்டியில் பதிவான அதிர்வு குறித்த விசேட ஆய்வுகள்...

கண்டியில் பதிவான அதிர்வு குறித்த விசேட ஆய்வுகள் முன்னெடுப்பு

by Staff Writer 30-08-2020 | 7:39 AM
Colombo (News 1st) கண்டி - தலாத்துஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பில் புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் விசேட ஆய்வுகளை முன்னெடுத்துள்ளது. இதற்காக குறித்த பகுதிகளுக்கு விசேட குழுவினர் சென்றுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் குறிப்பிட்டுள்ளது. கண்டி - தலாத்துஓயாவை அண்மித்த சில பகுதிகளில் நேற்றிரவு 8.34 மணியளவில் சிறியளவில் அதிர்வொன்று பதிவாகியது. திகண, அளுத்ஹேன, அம்பக்கோட்டே, ஹாரகம மற்றும் குருதெனிய ஆகிய பகுதிகளிலேயே அதிர்வு பதிவாகியுள்ளது. எனினும் இதுவொரு நிலநடுக்கம் அல்லவென புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்தார். இது குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை என புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கமொன்று ஏற்பட்டிருக்குமாயின், தமது பணியகத்தின் கீழுள்ள 05 மத்திய நிலையங்களில் அது குறித்து பதிவாகியிருக்குமெனவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் இன்று (30) சீரான ஆய்வு மேற்கொள்ளப்படுமென புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்