by Staff Writer 29-08-2020 | 4:08 PM
Colombo (News 1st) COPE எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான தெரிவுக்குழு மற்றும் கோப்பா (COPA) எனப்படும் அரசாங்க கணக்கு குழு ஆகியவற்றிற்கான உறுப்பினர்களின் பெயர்களைக் குறிப்பிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள எண்ணிக்கைக்கு அமைய பெயர் விபரங்கள் கோரப்பட்டுள்ளன.
எதிர்வரும் 08 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கும் வகையில் பெயர்ப் பட்டியலை அனுப்பி வைக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
கோப் மற்றும் கோப்பா குழுக்களுக்கு 22 உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இதேவேளை, கோப் மற்றும் கோப்பா எனப்படும் அரசாங்க கணக்குகளுக்கான தெரிவுக்குழு ஆகியவற்றின் தலைமைத்துவத்தை எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.