யாழ். மாவட்ட சந்தைகளில் வெங்காயத்தின் விலை உயர்வு

யாழ். மாவட்ட சந்தைகளில் வெங்காயத்தின் விலை உயர்வு

by Staff Writer 29-08-2020 | 7:52 PM
Colombo (News 1st) யாழ். மாவட்ட சந்தைகளில் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை உயர்வடைந்துள்ளது. கடந்த காலத்தில் 50 முதல் 60 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் வெங்காயம் தற்போது 100 முதல் 120 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. வெங்காய இறக்குமதிக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு வெங்காயத்திற்கு சந்தையில் சிறந்த கேள்வி நிலவுகின்றது. விதை வெங்காயம் ஒரு கிலோவை 300 ரூபாவிற்கு கொள்வனவு செய்து, கடந்த காலத்தில் பெரும் நட்டத்தை எதிர்நோக்கியபோதிலும் தற்போது தமது வருமானம் அதிகரித்துள்ளதாக செய்கையாளர்கள் குறிப்பிட்டனர். வெங்காயம் மற்றும் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் இதுபோன்ற கொள்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் யாழ். மாவட்ட செய்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.