மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

by Staff Writer 29-08-2020 | 6:09 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,995 ஆக அதிகரித்துள்ளது . பிரித்தானியா மற்றும் லெபனானில் இருந்து வருகை தந்த இருவருக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வருகை தந்த 04 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நாடு திரும்பிய பின்னர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 134 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 07 பேர் இன்று குணமடைந்துள்ளனர். அதற்கமைய, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2, 849 ஆக அதிகரித்துள்ளது.