முத்துராஜவெல வனப்பகுதியில் விமானத் தேடுதல் வேட்டை: கசிப்பு தொழிற்சாலைகள் அழிப்பு

முத்துராஜவெல வனப்பகுதியில் விமானத் தேடுதல் வேட்டை: கசிப்பு தொழிற்சாலைகள் அழிப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Aug, 2020 | 7:42 pm

Colombo (News 1st) முத்துராஜவெல வனப்பகுதியில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த கசிப்பு தொழிற்சாலைகள் சில நேற்று (28) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது அழிக்கப்பட்டுள்ளன.

விமானப்படை, கடற்படையின் விசேட பிரிவினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இந்த சுற்றிவளைப்பினை முன்னெடுத்திருந்தனர்.

விமானப்படையின் புலனாய்வு கண்காணிப்புப் பிரிவு, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் யுத்த மூலோபாய பிரிவினால் உறுதிப்படுத்தப்பட்ட நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு மதுபான தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்