மக்கள் சக்தி குழுவினரின் முதல் நாள் பயணம்

மக்கள் சக்தி குழுவினரின் முதல் நாள் பயணம்

எழுத்தாளர் Staff Writer

29 Aug, 2020 | 8:16 pm

Colombo (News 1st) அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மேடைகளில் மக்கள் பிரதிநிதிகள் கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில், அவர்களை ஆட்சிப்பீடமேற்றிய மக்களின் பிரதான பிரச்சினை அரசியலமைப்பா?

மக்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துகையில், உண்மையில் எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற புரிதல் மிக மிக முக்கியமானதாகும்.

மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் திட்டத்தின் 05 ஆம் கட்டத்தின் கீழ் மக்களின் பிரச்சினைகளை அறிந்து நிவர்த்திக்கும் முதல் நாள் பயணம் இன்று ஆரம்பமானது.

இம்முறை மக்கள் சக்தி குழாத்தினருடன் பேராதனைப் பல்கலைக்கழகமும் மத்திய வங்கியும் கரம் கோர்த்துள்ளன.

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மக்கள் சக்தி குழாத்தினர் பயணித்தனர்.

அங்கு கெருடாவில், சீலாப்புலம், மாயபுறக் கோவில், அன்பிராயன்,நெல்லியடி, இராஜபுரம் மற்றும் புனிதநகர் கிராமங்களுக்கு மக்கள் சக்தி குழுவினர் சென்றனர்.

குறைவின்றி சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு சவால்களை இங்குள்ள மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கி வருகின்றனர்.

இதேவேளை, மேலும் இரு மக்கள் சக்தி குழாத்தினர் களுத்துறை, மாத்தளை மாவட்ட மக்களின் குறைகளை இன்று கேட்டறிந்து கொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்