தப்பிக்க முயன்ற பாதாளக்குழு துப்பாக்கிதாரி இந்திரா பொலிஸாரால் சுட்டுக் கொலை

தப்பிக்க முயன்ற பாதாளக்குழு துப்பாக்கிதாரி இந்திரா பொலிஸாரால் சுட்டுக் கொலை

எழுத்தாளர் Staff Writer

29 Aug, 2020 | 3:32 pm

Colombo (News 1st) பாதாளக்குழுவின் துப்பாக்கிதாரியான இந்திரா என அழைக்கப்படும் இந்துனில் வஜிர குமார பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.

நவகமுவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸாரிடமிருந்து தப்பிச்செல்ல முற்பட்ட போதே, சந்கேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.

குறித்த சந்தேகநபரால் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கண்டறிவதற்காக, சந்கேகநபரை ஜீப் வண்டியில் அழைத்துச் செல்லும் போது, சாரதிக்கு இடையூறு ஏற்படுத்தி, களனி கங்கை அருகில் ஜீப் வண்டியிலிருந்து தப்பிக்க முயற்சித்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனைத் தடுக்க முயன்ற பொலிஸார், சந்தேகநபர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த சந்தேகநபர், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்தமை, கப்பம் கோரியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேகநபரான சமயங் என்பவரின் உதவியாளரான இந்திரா, 10 கிராம் ஹெரோயினுடன் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்