ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கத் தயார்: ருவன் விஜேவர்தன தெரிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கத் தயார்: ருவன் விஜேவர்தன தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Aug, 2020 | 5:04 pm

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க தாம் தயாராகவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற கூட்டமொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்

கட்சியின் தோல்வியாக இந்த சந்தர்ப்பத்தை நோக்காது, அடுத்தகட்ட செயற்பாடுகளுக்கான சந்தர்ப்பமாக தாம் இதனை கருதுவதாகவும் ருவன் விஜேவர்தன கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தேவையான மறுசீரமைப்புகளை மேற்கொள்ள தற்போது சந்தர்ப்பம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்து, கட்சி ஆதரவாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்க தற்போது சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியின் தோல்வியாக இந்த சந்தர்ப்பத்தை நோக்காது, அடுத்தகட்ட செயற்பாடுகளுக்கான சந்தர்ப்பமாக தாம் கருதுவதாகவும் ருவன் விஜேவர்தன கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்