பாராளுமன்ற செயலமர்வில் அமெரிக்க உதவித் திட்டத்தில் பேனா, புத்தகங்கள் வழங்கப்பட்டமைக்கு கெவிந்து குமாரதுங்க எதிர்ப்பு

by Staff Writer 28-08-2020 | 8:55 PM
Colombo (News 1st) புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக அண்மையில் நடைபெற்ற பயிற்சிப்பட்டறையின் போது முன்னெடுக்கப்பட்ட இரண்டு செயற்பாடுகளினால் உறுப்பினர்களுக்கான சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று சபாநாயகருக்கு தெரிவித்தனர். பாராளுமன்றத்திற்கு முதன்முறையாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான பயிற்சிப்பட்டறை கடந்த 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. இந்த பயிற்சிப்பட்டறையின் போது அமெரிக்காவின் தலையீடு காணப்பட்டமையினால், உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக கெவிந்து குமாரதுங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான கெவிந்து குமாரதுங்க,
பயிற்சிப்பட்டறையின் ஆரம்பத்தில் பாராளுமன்றத்தின் அதிகாரிகளால் எங்களுக்கு வழங்கப்பட்ட அரசியலமைப்பு மற்றும் நிலையியற்கட்டளை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதன்போது, எமக்கு ஒரு நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இலச்சினை அடங்கிய புத்தகமும் பேனையும் வழங்கியிருந்தனர். ACSA உடன்படிக்கை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் குறிப்பாக கடற்படையின் கருத்துக்களை கவனத்திற்கொள்ளாது 2017 ஆம் ஆண்டு அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக்கொள்ள அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் தலையிட்டதன் பின்னர், வௌிவிவகார அமைச்சின் செயலாளராக செயற்பட்டு ஓய்வு பெற்ற பின்னர், இந்த சபையின் முன்னாள் சபாநாயகரின் வெளிவிவகார ஆலோசகராக நியமிக்கப்பட்டதும் தெரியவந்தது. இந்த செயற்பாடு பாராளுமன்றத்தின் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கவில்லையா என பேராசிரியர் சன்னா ஜெயசுமனா அதே அமர்வில் கேள்வி எழுப்பியபோது, பாராளுமன்றத்தில் தகவல் தொடர்புத்துறையை மேம்படுத்த அமெரிக்க அரசு நிறைய பணம் செலவழித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. நம் நாட்டிற்கு எதிராக செயற்படும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனலின் தலைவர் , பாராளுமன்றத்தின் தகவல் தொடர்பு பிரிவில் அதிகாரியாக உள்ளார் என்பதையும் பயிற்சிப்பட்டறையின் போது பார்த்தோம். இறுதியாக சபாநாயகராக செயற்பட்டவரினாலே இந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தது. கெளரவ சபாநாயகர் அவர்களே, நம் நாட்டில் தேவையின்றித் தலையிடும் வௌிநாட்டின் ஒரு நிறுவனத்திற்கு பதவி வழங்கியுள்ளமையை நீங்கள் அறிவீர்களா? இந்த விடயம் தொடர்பில் பூரண கவனம் செலுத்துவீர்களா?
என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, பாராளுமன்றத்தின் சுயாதீனத்திற்கும் உறுப்பினர்களுக்கும் எவ்வித அழுத்தங்களும் வழங்க இடமளிக்க முடியாது என குறிப்பிட்டார். இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருவேளை உணவிற்காக ஒருவருக்கு 3000 ரூபா செலவு செய்யப்பட்டமை தொடர்பிலும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டறையில் உறுப்பினர் ஒருவரின் உணவிற்கு 3000 ரூபா செலவாகியுள்ளதாக அதிகாரி ஒருவர் வெளியிட்ட அறிக்கை தொடர்பாகவும் இன்று பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்றது.
பாராளுமன்ற ஊழியர்கள், சாரதிகள் உள்ளிட்ட 2000 பேர் உணவினை உட்கொள்ளுகின்றனர். தணிக்கைத் துறையால் வழங்கப்பட்ட 2000, 225 ஆல் பிரிக்கப்படுகின்றதா என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அது எங்களுக்கு எதிரான மிகப்பெரிய குற்றமாகும்
என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் குறிப்பிட்டார்.
அனைத்து உணவுகளுக்குமான செலவுகள் 225-ஆல் பிரிக்கப்படுகின்றது. அதன் பின்னர் நேற்று நான் ஆராய்ந்து பார்த்தேன், ஒரு உறுப்பினருக்காக 296 ரூபா செலவிடப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் சரியாக ஆராயாமல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது
என சபாநாயகர் குறிப்பிட்டார்.