பொடி லெசியின் உதவியாளர் வெடிபொருட்களுடன் கைது

பொடி லெசியின் உதவியாளர் வெடிபொருட்களுடன் கைது

by Bella Dalima 28-08-2020 | 4:38 PM
Colombo (News 1st) அம்பலாங்கொடை - வதுகெதர பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, ரவைகள் என்பனவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மற்றும் ரத்கம பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வதுகெதர விகாரை வீதியில் கல் , மணல் என்பவற்றை விற்பனை செய்யும் ஒருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் T-56 ரக துப்பாக்கி, 98 ரவைகள், 9mm ரக துப்பாக்கி ரவைகள் 53 , கைக்குண்டு, கட்டுத்துப்பாக்கி, ஒருதொகை கைவிலங்குகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர், தற்போது சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பொடி லெசியின் உதவியாளர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.