பாடசாலை மாணவர்களுக்கு பாலுக்கு பதிலாக அரிசிக் கஞ்சி வழங்க திட்டம்

பாடசாலை மாணவர்களுக்கு பாலுக்கு பதிலாக அரிசிக் கஞ்சி வழங்க திட்டம்

பாடசாலை மாணவர்களுக்கு பாலுக்கு பதிலாக அரிசிக் கஞ்சி வழங்க திட்டம்

எழுத்தாளர் Bella Dalima

28 Aug, 2020 | 3:34 pm

Colombo (News 1st)  பாடசாலை மாணவர்களுக்கு பாலுக்கு பதிலாக அரிசிக் கஞ்சி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசிக் கஞ்சியை வழங்குவதே மிகவும் சிறந்ததென சுகாதார அதிகாரிகளால் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா தெரிவித்துள்ளார்.

இரசாயன உரத்தை பயன்படுத்தாமல் இயற்கை உரத்தை பயன்படுத்தி, சுமார் 10,000 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விவசாயிகளிடமிருந்து அதிக விலைக்கு நெல்லை பெற்று, அதனூடாக பாடசாலை மாணவர்களுக்கு அரிசிக் கஞ்சியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்