க.பொ.த சாதாரண தர பரீட்சை 2021 ஜனவரியில் நடைபெறும் என அறிவிப்பு

க.பொ.த சாதாரண தர பரீட்சை 2021 ஜனவரியில் நடைபெறும் என அறிவிப்பு

க.பொ.த சாதாரண தர பரீட்சை 2021 ஜனவரியில் நடைபெறும் என அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

28 Aug, 2020 | 4:04 pm

Colombo (News 1st) கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்தாண்டு (2021) ஜனவரி மாதம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த சாதாரண தர பரீட்சை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை இடம்பெறுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் ஏனைய மாணவர்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்படுமெனவும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் 2021 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் 2021 ஜனவரி 17 ஆம் திகதி வரை பரீட்சைக்கு தயாராவதற்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சையை ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல் நவம்பர் 06 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில், ஒக்டோபர் 10 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 08 ஆம் திகதி வரை பாடசாலை விடுமுறைக்காலம் அறிவிக்கப்படுமென கல்வியமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்