வாழ்க்கைச் செலவு தொடர்பிலான அமைச்சரவை உப குழு நியமனம் 

by Staff Writer 27-08-2020 | 1:21 PM
Colombo (News 1st) வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவினை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதியினால் இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது. இது குறித்து அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தௌிவுபடுத்தினார். விவசாய அமைச்சர், மீன்பிடி அமைச்சர் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் லசந்த அழகியவன்ன, ஷஷீந்திர ராஜபக்ஸ, அருந்திக பெர்னாண்டோ உள்ளிட்டோரின் தலைமையில் ஒன்றாக இணைந்து நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு தொடர்பிலும் நாட்டில் உள்ள உற்பத்தியாளர்கள் மற்றும் கொள்வனவாளர்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் எதிர்காலத்தில் செயற்படுவதற்கு எதிர்ப்பார்ப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண இதன்போது விளக்கமளித்துள்ளார்.