தொல்பொருள் செயலணியில் புதிதாக நால்வர் இணைப்பு

கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியில் புதிதாக நால்வர் இணைப்பு

by Staff Writer 27-08-2020 | 6:55 PM
Colombo (News 1st) கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியில் மல்வத்து - அஸ்கிரி பீடங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுடன் புதிதாக நான்கு பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவின் கையொப்பத்துடன், இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், அஸ்கிரி பீடத்தின் அநுநாயக்கர் வென்டருவே உபாலி தேரர், அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் ஆகியோர், கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மல்வத்து பீடத்தின் பதிவாளர் கலாநிதி பஹமுனே சுமங்கல தேரர், மற்றும் அம்பன்வெல்லே ஶ்ரீ சுமங்கல தேரர் ஆகியோரும் செயலணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில், கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.