மாத்தளை மாநகர சபையின் புதிய மேயராக சந்தனம் பிரகாஷ் நியமனம்

மாத்தளை மாநகர சபையின் புதிய மேயராக சந்தனம் பிரகாஷ் நியமனம்

மாத்தளை மாநகர சபையின் புதிய மேயராக சந்தனம் பிரகாஷ் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

27 Aug, 2020 | 7:05 pm

Colombo (News 1st) மாத்தளை மாநகர சபையின் புதிய மேயராக சந்தனம் பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாத்தளை மாநகர சபையின் மேயர் பொறுப்பை வகித்த டல்ஜித் அலுவிஹாரேவிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்ற விசாரணை நடத்தப்படுவதால், புதிய மேயரை மத்திய மாகாண ஆளுநர் W.U கமகே வர்த்தமானி அறிவித்தல் மூலம் நியமித்துள்ளார்.

டல்ஜித் அலுவிஹாரேவின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தனவின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை பிறப்பித்து மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே தெரிவித்துள்ளார்.

3 மாதங்களுக்குள் குறித்த விசாரணை அறிக்கையை வழங்குமாறு மத்திய மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

டல்ஜித் அலுவிஹாரேவிற்கு பதிலாக பிரதி நகர மேயர் சந்தனம் பிரகாஷ் நியதிக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்