நியூஸிலாந்து துப்பாக்கிச் சூடு: ஆயுததாரிக்கு ஆயுள் தண்டனை

நியூஸிலாந்து துப்பாக்கிச் சூடு: ஆயுததாரிக்கு ஆயுள் தண்டனை

நியூஸிலாந்து துப்பாக்கிச் சூடு: ஆயுததாரிக்கு ஆயுள் தண்டனை

எழுத்தாளர் Staff Writer

27 Aug, 2020 | 10:42 am

Colombo (News 1st) நியூஸிலாந்து – கிரைஸ்ட்சேர்ச்சிலுள்ள (Christchurch) வழிபாட்டுத் தலத்தில்  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு 51 பேரை கொலை செய்த ஆயுததாரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

29 வயதான அவுஸ்ரேலிய பிரஜை பிரெண்டன் ரறன்ட், பிணையில் வௌிவர இயலாதவாறு ஆயுள் முழுவதும் சிறைவாசம் அனுபவிக்கும் வகையில் நியூஸிலாந்து நீதிமன்றத்தினால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆயுததாரியால் கொல்லப்பட்டவர்கள் 

ஆயுததாரியான பிரெண்டன் ரறன்ட் மீது 51 பேரை கொலை செய்தமை, 40 பேரை கொலை செய்ய முயற்சித்தமை மற்றும் பயங்கரவாத செயல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

இந்த வழக்கில் கருணை காட்ட முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்து வரலாற்றில் இவ்வாறான தண்டனை வழங்கப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவையாகும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்