இறைவரி உள்ளிட்ட சில சட்டங்களில் மீண்டும் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி

இறைவரி உள்ளிட்ட சில சட்டங்களில் மீண்டும் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி

இறைவரி உள்ளிட்ட சில சட்டங்களில் மீண்டும் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி

எழுத்தாளர் Bella Dalima

27 Aug, 2020 | 8:39 pm

Colombo (News 1st) நாட்டில் வரி முறைமையை இலகுபடுத்துவதற்கான சில வரிச்சட்டங்களைத் திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து தௌிவுபடுத்தப்பட்டது.

இந்த அமைச்சரவை தீர்மானத்திற்கமைய, தற்போது நடைமுறையிலுள்ள நான்கு சட்டங்கள் திருத்தப்படவுள்ளன. 2009ஆம் ஆண்டின் ஒன்பதாம் இலக்க வரிச் சட்டம், 2006ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க பொருளாதார சேவைக் கட்டணச் சட்டம், 2011ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரிச் சட்டம், 2018ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க நிதிச்சட்டம் ஆகிய சட்டங்களைத் திருத்துவதற்கான சட்டமூலத்தை வர்த்தமானி மூலம் வௌியிடுவதற்கு அமைச்சரவை நேற்று அனுமதி அளித்தது. அத்துடன், 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு வருமானச் சட்டம், 2002ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டம் ஆகியவற்றிலும் தேவையான திருத்தங்களைச் செய்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு ஆலோசனை வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது

என அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் கையிருப்பு முகாமைத்துவத்திற்காக தரவு முகாமைத்துவக் கட்டமைப்பை நிறுவுவதற்கான விலைமனுவை சிங்கப்பூரின் SimCorp Pte. Limited நிறுவனத்திற்கு வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இந்தத் தரவுக் கட்டமைப்பை நிறுவி நடைமுறைப்படுத்துவதற்காக சர்வதேச விலைமனுக் ​கோரலுக்கமைய, அந்த நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தின் வருமானம் குறைந்துள்ள நிலையில், செலவுகளில் எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தீர்மானிக்க வேண்டும் அல்லவா?

மத்திய அதிவேக வீதியின் கடவத்தை, மீரிகம பகுதியை நிர்மாணிப்பதற்காக, உள்நாட்டு நிதியத்திலிருந்து 16.7 பில்லியன் ரூபா ஒப்பந்த நிறுவனத்திற்கு முற்பணமாக வழங்கப்பட்டுள்ளது.

அதிவேக வீதியை நிர்மாணித்து நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் எவரும் கேள்வி எழுப்பாமல் இருக்கலாம்.

எனினும், நாட்டில் வருமானம் குறைந்துள்ளதை அமைச்சரே ஏற்றுக்கொள்ளும் நிலையில், மிகவும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விடயமா இடம்பெற்றுள்ளது என்ற கேள்வியே எழுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்