19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாதுகாக்கத் தயாராவதாக எதிர்க்கட்சி தெரிவிப்பு

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாதுகாக்கத் தயாராவதாக எதிர்க்கட்சி தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2020 | 7:24 pm

Colombo (News 1st) 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாதுகாப்பதற்காக ஒருங்கிணைந்த போராட்டத்தை ஆரம்பிக்க எதிர்க்கட்சி தயாராகியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன பின்வருமாறு தெரிவித்தார்

அரசியல் யாப்பு பேரவையின் ஊடாக சகல நியமனங்களுக்கும் ஜனாதிபதியிடமிருந்த அதிகாரத்தை இரத்து செய்து, அந்தப் பேரவையிடம் சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டன. தம்மை அலரி மாளிகைக்கு அழைத்து வழக்கின் தீர்ப்புகளை மாற்றக் கோரிய விதமும், அங்கிருந்து மோதல் ஆரம்பமான வரலாற்றையும் ஷிரானி பண்டாரநாயக்க தன்னுடைய நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் 19 ஆவது திருத்தம் மாத்திரமே மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஒரேயொரு மறுசீரமைப்பாகும். 19 ஆவது திருத்தத்தை மேலும் விரிவாக்கி முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமே தவிர அதனை இல்லாமல் ஆக்கக்கூடாது. அதுவே எமது தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சியினரின் நிலைப்பாடாகும்

இதேவேளை, தற்போது 19 ஆவது திருத்தத்தை விமர்சிக்கும் பெரும்பாலானவர்கள் அப்போது 18-க்கு எதிராக கை உயர்த்தியவர்கள் என சட்டத்தரணி ஷிரால் லக்திலக்க குறிப்பிட்டார்.

19 ஆவது திருத்தத்தில் 36 பலாபலன்கள் இருக்கின்றன. அவற்றில் 13 பலாபலன்களில் ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைக்கும் படியே கோரப்படுகிறது. பாரியதொரு தேவை பசில் ராஜபக்ஸவிற்கு தான் ஏற்பட்டுள்ளது. பசில் ராஜபக்ஸ பாராளுமன்றத்திற்கு தெரிவாக வேண்டும் என்றால் 19 ஆவது திருத்தம் மாற்றப்பட வேண்டும். அப்படியானால் 19 ஆவது திருத்தத்தை துண்டு துண்டாக மாற்ற முடியாது. இதனால், முழுவதையும் குப்பைத் தொட்டியில் எறிவதே அவரது எதிர்பார்ப்பு

என ஷிரால் லக்திலக்க மேலும் குறிப்பிட்டார்.

ஒருவருடைய அமெரிக்க பிரஜாவுரிமையை பாதுகாப்பதற்காக 210 இலட்சம் மக்களுக்குள்ள உரிமைகளை நீக்கப் போகின்றனர் என கலாநிதி ஹர்ஷ டி சில்வா கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்