இஷார லக்மாலின் கணக்காளர் கைது

பாதாளக்குழு உறுப்பினர் இஷார லக்மாலின் கணக்காளர் கைது

by Staff Writer 26-08-2020 | 4:40 PM
Colombo (News 1st) துபாய்க்கு தப்பிச்செல்ல முயன்ற போது வெல்லே சாரங்கவுடன் வைத்து கைது செய்யப்பட்ட பாதாளக்குழு உறுப்பினர்  இஷார லக்மால் என்பவரின் கணக்காளர் வெல்லம்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளார். விதானகே கயான் ஹேமந்த எனும் 32 வயதான குறித்த நபர் 'இஷார' என்ற பெயரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரிடமிருந்து 03 கிலோ 250 கிராம் கேரளக்கஞ்சா, 60 ஆயிரம் ரூபா பணம், இரண்டு வாகனங்கள், தொலைபேசி, வங்கிக்கணக்கு புத்தகம், வங்கி அட்டை என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவுடன் தொடர்புடையவரான வெல்லே சாரங்க , துபாய்க்கு தப்பிச்செல்ல உதவி செய்த மூவரில் ஒருவரான இஷாரவிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.