கைலாசா நாட்டிற்கு செல்ல விரும்பும் மீரா மிதுன்

கைலாசா நாட்டிற்கு செல்ல விரும்பும் மீரா மிதுன்

by Bella Dalima 26-08-2020 | 4:53 PM
நித்யானந்தாவின் கைலாசா நாட்டிற்கு செல்ல விரும்புவதாக நடிகை மீரா மிதுன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழில் சில படங்களில் நடித்த மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். அதன்பின் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் சர்ச்சையான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். இந்நிலையில், அண்மையில் கைலாசா நாட்டின் நாணயத்தை வெளியிட்ட நித்யானந்தாவைப் பாராட்டி, மீரா மிதுன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “அனைவரும் அவரை கேலி செய்தார்கள், அனைவரும் அவரை தவறாகப் பேசினார்கள். அனைவரும் அவரை தரக்குறைவாகப் பார்த்தார்கள். அனைத்து ஊடகங்களும் அவருக்கு எதிராக இருந்தன. ஆனால், அவரோ கைலாசா எனும் புதிய நாட்டையே உருவாக்கியுள்ளார். விரைவில் கைலாசாவிற்கு செல்ல விரும்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.