தேவை, தூரத்தின் அடிப்படையில் அமைச்சர்களுக்கு முன்னுரிமை 

தேவை, தூரத்தின் அடிப்படையில் அமைச்சர்களுக்கு முன்னுரிமை 

தேவை, தூரத்தின் அடிப்படையில் அமைச்சர்களுக்கு முன்னுரிமை 

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2020 | 11:11 am

Colombo (News 1st) புதிய அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 70 பேர் உத்தியோகபூர்வ இல்லங்களை கோரியுள்ளதாக பொது சேவை மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

30 உத்தியோகபூர்வ இல்லங்களுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்தார்.

விண்ணப்பதாரர்களின் தேவை மற்றும் தூரம் ஆகிய விடயங்களின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் என செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தற்போதுள்ள சூழ்நிலையில் 70 பேருக்கு உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்குவதாயின் அமைச்சு பாரிய சிரமங்களை எதிர்கொள்ளும் எனவும் பொது சேவை மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்