டெஸ்ட் அரங்கில் 600 விக்கெட்களை வீழ்த்தி ஜேம்ஸ் அன்டர்சன் சாதனை

டெஸ்ட் அரங்கில் 600 விக்கெட்களை வீழ்த்தி ஜேம்ஸ் அன்டர்சன் சாதனை

டெஸ்ட் அரங்கில் 600 விக்கெட்களை வீழ்த்தி ஜேம்ஸ் அன்டர்சன் சாதனை

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2020 | 1:00 pm

Colombo (News 1st) டெஸ்ட் அரங்கில் 600 விக்கெட்களை வீழ்த்திய முதலாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பை இங்கிலாந்தின் ஜேம்ஸ் அன்டர்சன் பெற்றார்.

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த மைல்கல் சாதனையை எட்டினார்.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று (15) நிறைவுக்கு வந்தது.

சவுத்ஹேம்டனில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 583 ஓட்டங்களையும் பாகிஸ்தான் 273 ஓட்டங்களையும் பெற்றன.

பலோ ஒன்னில் இரண்டாம் இன்னிங்ஸில் பதிலளித்தாடிய பாகிஸ்தான் சார்பாக அணித்தலைவர் அசார் அலி, 31 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

அசார் அலியின் விக்கெட்டானது டெஸ்ட் அரங்கில் ஜேம்ஸ் அன்டர்சன் வீழ்த்திய 600 ஆவது விக்கெட்டாக பதிவானது.

இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் 600 விக்கெட்களை வீழ்த்திய முதலாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பை ஜேம்ஸ் அன்டர்சன் பெற்றார்.

டெஸ்ட் அரங்கில் 600 விக்கெட் மைல்கல்லை எட்டியுள்ள நான்காவது வீரராகவும் ஜேம்ஸ் அன்டர்சன் இதன்போது பதிவானார்.

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன், அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்ன், இந்தியாவின் அனில் கும்ளே ஆகியோர் இதற்கு முன்னர் டெஸ்ட் அரங்கில் 600 விக்கெட் மைல்கல் சாதனையை எட்டியுள்ளனர்.

போட்டியின் நேற்றைய ஐந்தாம் நாள் ஆட்டம் நிறைவுற்ற போது பாகிஸ்தான் 04 விக்கெட் இழப்புக்கு 184 ஓட்டங்களை பெற்றிருந்தது.

அதன்படி, போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன் 03 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 – 0 என இங்கிலாந்து கைப்பற்றியது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்