குருநாகல் மாநகர சபை மேயர் நகர்த்தல் பத்திரம் தாக்கல்

குருநாகல் மாநகர சபை மேயர் நகர்த்தல் பத்திரம் தாக்கல்

குருநாகல் மாநகர சபை மேயர் நகர்த்தல் பத்திரம் தாக்கல்

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2020 | 8:49 pm

Colombo (News 1st) மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (25) வழங்கிய இடைக்கால உத்தரவிற்கு அமைய குருநாகல் மாநகர சபையின் மேயர் உள்ளிட்ட ஐவரும் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை ஐந்து நகர்த்தல் பத்திரங்களை தாக்கல் செய்து ஆஜராகியிருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் நீதவான் நீதிமன்ற பதிவாளர் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக குருநாகல் நீதவான் தெரிவித்தார்

குருநாகல் நகரில் இருந்த பழமைவாய்ந்த அரசவை கட்டடத்திற்கு சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு செப்டம்பர் 4 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மாநகர சபையின் மேயர் உள்ளிட்ட ஐவரும் தாக்கல் செய்திருந்த மனுவொன்றை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் வழக்கு விசாரணை நிறைவு பெறும் வரை அவர்களை கைது செய்வதற்கான பிடியாணை நடைமுறைப்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை நேற்று பிறப்பித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்