ஏப்ரல் 21 தாக்குதல்: மைத்திரிபால சிறிசேனவின் வீட்டிற்கு சென்று வாக்குமூலம் பதிவு

ஏப்ரல் 21 தாக்குதல்: மைத்திரிபால சிறிசேனவின் வீட்டிற்கு சென்று வாக்குமூலம் பதிவு

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2020 | 9:50 am

Colombo (News 1st) ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவினர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

விஜயராமயில் உள்ள அவரின் வீட்டில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று (26) காலை அதிகாரிகள் சென்றுள்ளனர்.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் இன்று ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

முன்னாள் அமைச்சர்களும் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளும் இதற்கு முன்னர் ஆணைக்குழுவில் ஆஜராகி சாட்சியம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்