இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த பதவிப்பிரமாணம்

இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த பதவிப்பிரமாணம்

இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த பதவிப்பிரமாணம்

எழுத்தாளர் Bella Dalima

26 Aug, 2020 | 5:08 pm

Colombo (News 1st) கல்வி மறுசீரமைப்பு, தொலைதூரக் கல்வி, திறந்த பல்கலைக்கழகங்கள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இதன்போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

முன்னதாக, கல்வி மறுசீரமைப்பு, தொலைதூரக் கல்வி, திறந்த பல்கலைக்கழகங்கள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளராக Dr. M.உபாலி சேதர நியமிக்கப்பட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்