மலசலகூட குழியிலிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு

வீடொன்றின் மலசலகூட குழியிலிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு 

by Staff Writer 25-08-2020 | 9:51 AM
Colombo (News 1st) கம்பஹா - மொரகொட பகுதியில் தன்னியக்க துப்பாக்கிக்கான 500 ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பொலிஸார் முன்னெடுத்துள்ள சுற்றிவளைப்பில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வீடொன்றின் மலசலகூட குழியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரவைகளே மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை, ஹோக்கந்தர பகுதியில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே இந்த துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.