மாற்று வழிகளூடாக வருமானமீட்ட SLTB தீர்மானம்

இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானத்தில் வீழ்ச்சி

by Staff Writer 25-08-2020 | 7:14 AM
Colombo (News 1st) நாளாந்த வருமானம் 2 மில்லியன் ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக மக்கள், பொது போக்குவரத்து சேவைகளை தவிர்த்துள்ளதால் வருமானம் குறைவடைந்துள்ளதாக சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று பரவியதை தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தின் பின்னரே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு முன்னர், இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானமாக 75 முதல் 85 மில்லியன் ரூபாவாக காணப்பட்டுள்ளது. இவற்றினை கருத்திற் கொண்டு, மாற்று வழிகளூடாக வருமானத்தை ஈட்டுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.