வெலேவத்தை சம்பத் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது

வெலேவத்தை சம்பத் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது

வெலேவத்தை சம்பத் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2020 | 4:37 pm

Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளியான வெலேவத்தை சம்பத் வெல்லம்பிட்டியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான குடு ரொஷான் என்பவருடன் தொடர்புடையவர் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் வசமிருந்த 5 கிராம் 600 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்