பொடி லெசியின் தாயார் கைது 

பொடி லெசியின் தாயார் கைது 

பொடி லெசியின் தாயார் கைது 

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2020 | 8:35 am

Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘பொடி லெசி’ என அழைக்கப்படும் ஜனித் மதுஷங்க டி சில்வாவின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாணம் வடக்கு பிரிவில் கொட்டாவ மாயா மாவத்தை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் மூலம் பணம் ஈட்டப்பட்டமை தொடர்பில் கைதான குறித்த பெண்ணிடமிருந்து 51,000 பணம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 5 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபரான 50 வயதான பெண் இன்று (25) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்