தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் ஓய்வு பெற்றுச் சென்றால் நல்லது: விமல் வீரவன்ச

தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் ஓய்வு பெற்றுச் சென்றால் நல்லது: விமல் வீரவன்ச

எழுத்தாளர் Bella Dalima

25 Aug, 2020 | 5:39 pm

Colombo (News 1st) தனிப்பட்ட தேவைகளுக்காக சட்டங்கள் வகுக்கப்படுவதை ஏற்கப்போவதில்லை என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் அரசை விட தனிநபர்களின் தேவைகளுக்காக இயற்றப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என விமல் வீரவன்ச கூறினார். நாட்டை வலுவடையச் செய்வதை நோக்கமாகக் கொண்டே அதனை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்த விமல் வீரவன்ச, முந்தைய அரசாங்கத்தின் போது தேர்தல் விடயத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஒரு மந்தமான அணுகுமுறையைப் பின்பற்றியதாகவும் புதிய அரசாங்கத்தின் தேர்தலைத் தொடர்ந்து, இந்த செயன்முறையை அவர் விரைவுபடுத்த விரும்புவதாகவும் கூறினார்.

”மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் ஓய்வு பெற்றுச் சென்றால் நல்லது,” எனவும் வீரவன்ச குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்