கொரோனா தொற்று: மேலும் 05 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்று: மேலும் 05 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்று: மேலும் 05 பேர் குணமடைந்தனர்

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2020 | 4:13 pm

Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 05 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனடிப்படையில், COVID-19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1816 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, நாட்டில் இதுவரை 2,959 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

நேற்றைய தினம் 6 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், 131 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 12 ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்