பற்றைக்காடாக மாற்றமடைந்துள்ள வவுனியா பொதுப் பூங்கா

by Staff Writer 24-08-2020 | 3:36 PM
Colombo (News 1st) பல இலட்சங்கள் ரூபா பெறுமதியில் செயற்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் மக்கள் பாவனையின்றி அழிவுறும் நிலைக்குச் செல்கின்றன. வவுனியா - கோமரசன்குளம் பகுதியிலுள்ள பொதுப் பூங்காவின் நிலையும் அவ்வாறே உள்ளது. மக்களின் நலன்கருதி அமைக்கப்பட்ட குறித்த பொதுப் பூங்கா மக்களின் பாவனையின்றி காட்சியளிக்கின்றது. வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் பராமரிப்பில் குறித்த பூங்கா உள்ளது. எனினும், பிரதேச சபையின் கவனிப்பின்மையே பூங்காவின் இந்த நிலைக்குக் காரணம் என பிரதேச மக்கள் கவலை வௌியிடுகின்றனர். 2015 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனால் அடிக்கல் நாட்டப்பட்டு பல இலட்சம் ரூபா பெறுமதியில் குறித்த பூங்கா நிர்மாணிக்கப்பட்டது. எனினும், பூங்காவை பராமரிக்காமை காரணமாக மக்கள் பூங்காவிற்கு செல்வதைத் தவிர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், தொடர்ச்சியாக பிரதேச சபையும் பூங்காவை பராமரிக்காமையினால் பூங்கா தற்போது பற்றைக்காடாக மாற்றம் பெற்று வருகின்றது. உரிய கட்டுமானங்கள், நிர்மாணங்கள் இன்றி மக்கள் பெரும் இன்னல்களை அனுபவித்து வரும் நிலையில் உள்ள வசதிகளை கவனிப்பின்றி கைவிடுவது வேதனைக்குரியதே.

ஏனைய செய்திகள்