கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் ஒருவர் கைது

கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் ஒருவர் ஹெரோயினுடன் கைது

by Staff Writer 24-08-2020 | 3:45 PM
Colombo (News 1st) பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் ஒருவர், பியகம - பேரகஸ் சந்தி பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட 33 வயதான சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் 780 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை, வெல்லம்பிட்டி - மஹரகம மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் போதைப்பொருட்களுடன் 7 சந்தேகக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லம்பிட்டி - மஹபுத்கமுவ பகுதியில் மாவா மற்றும் கேரள கஞ்சாவுடன் 44 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மஹரகம - பதிரகொட பகுதியில் ஹெரோயினுடன் 40 வயதான ஒருவரும் யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் ஹெரோயினுடன் சந்தேக நபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.