ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க தயார் –  கரு ஜயசூரிய

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க தயார் – கரு ஜயசூரிய

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க தயார் – கரு ஜயசூரிய

எழுத்தாளர் Staff Writer

24 Aug, 2020 | 2:44 pm

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலைமைத்துவம் வகிக்கும் சவாலை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியும் என கட்சியின் தற்போதைய தலைவர் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளதாக கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை கருத்திற்கொண்டு, பலரும் முன்வைத்த வேண்டுகோளை பரிசீலித்து கட்சியினதும் நாட்டினதும் வளர்ச்சிக்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்து அனைத்து ஆதரவாளர்களும் நாட்டின் முன்னேற்றம் மற்றும் ஜனநாயகத்தை விரும்பும் பிரஜைகளும் கவலையடைந்துள்ளதாக கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியை பாதுகாக்குமாறு, மகா சங்கத்தினர் உள்ளிட்ட அனைத்து மதத் தலைவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், நாட்டை நேசிக்கும் புத்திஜீவிகள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுகின்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாகாண மற்றும் பிரதேச மட்ட மக்கள் பிரதிநிதிகள், தொழிற்சங்கங்கள், இளையோர் அமைப்புகள் மற்றும் ஜனநாயகத்தை விரும்பும் பொது அமைப்புகள் தம்மிடம் வேண்டுகோள் விடுத்ததாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்