by Staff Writer 23-08-2020 | 3:17 PM
Colombo (News 1st) பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்வதற்கான தேர்ச்சிப் பரீட்சைகளின் பெறுபேறுகள் கிடைத்தவுடன் பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளை வௌியிடவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களில் 36 பாடநெறிகளுக்கான தேர்ச்சிப் பரீட்சைகள் நடைபெறுவதாக ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிட்டா லியனகே கூறியுள்ளார்.
இவற்றில் பெரும்பாலான பரீட்சைகளை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெட்டுப்புள்ளிகளை வௌியிடுவதற்கு குறித்த தேர்ச்சிப் பரீட்சைகளின் பெறுபேறுகள் வௌியிடப்பட வேண்டியது அவசியாகும்.