உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரியை அதிகரிக்க தீர்மானம் 

by Staff Writer 23-08-2020 | 3:12 PM
Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராமிற்கான வரியை 5 ரூபாவால் அதிகரிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், இறக்குதி செய்யப்படும் உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராமிற்கான வரி 55 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. நாட்டில் உருளைக்கிழங்கு அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் S.R. ஆட்டிகல தெரிவித்துள்ளார்.