காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தல்

காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தல்

காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

23 Aug, 2020 | 6:52 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு – சித்தாண்டி பகுதியில் 1990 ஆம் ஆண்டு இராணுவத்தினரின் சுற்றிவளைப்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவேந்தல் இன்று (23) இடம்பெற்றது.

சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி ஆலய முன்றலில் இதன்போது நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைலி அமலநாயகி தலைமையில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நினைவேந்தலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் வழிபாடுகள் இடம்பெற்றதன் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது.

காணாமல் போனோர் தொடர்பில் சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்