English
සිංහල
எழுத்தாளர் Chandrasekaram Chandravadani
23 Aug, 2020 | 4:49 pm
Colombo (News 1st) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில காட்டுத்தீயை பேரிடர் நிலைமையாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
சுமார் 585 இடங்களில் பரவியுள்ள தீயை அணைக்கும் நடவடிக்கையில் 14,000 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை ஒரு மில்லியன் ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது.
பலத்த காற்று காரணமாக தீ வேகமாக பரவி வருவதாக கூறப்படுகின்றது.
காட்டுத் தீயில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
மலைப்பாங்கான மற்றும் பலகை குடியிருப்புக்களை கொண்ட 3 இடங்களிலேயே பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தென் மற்றும் கிழக்கு சென் பிரான்சிஸ்கோவில் SCU Lightening Complex இல் ஏற்பட்ட தீயே கலிபோர்னிய வரலாற்றில் மூன்றாவது பாரிய தீப்பரவல் என மாநில ஆளுநர் Gavin Newsom தெரிவித்துள்ளார்.
சென் ஜோஸை அண்மித்த குடா பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஏனையவர்களை குடியிருப்புகளை விட்டு வௌியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
24 Jan, 2021 | 07:30 PM
23 Jan, 2021 | 03:12 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS