மின் துண்டிப்பிற்கு மின்சக்தி அமைச்சு காரணமாக இருந்தால் பதவி விலகுவதாக டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு

by Staff Writer 22-08-2020 | 9:08 PM
Colombo (News 1st) கடந்த நாட்களில் நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட காரணமான விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை கிடைக்கவுள்ளதுடன், மின்சக்தி அமைச்சே அதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்று உறுதியானால் அது தொடர்பில் தாம் எடுக்கும் நடவடிக்கை குறித்து விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் டலஸ் அழகப்பெரும இன்று தெளிவுபடுத்தினார்​.
மின்சக்தி அமைச்சுதான் இதற்கு பதிலளிக்க வேண்டுமாக இருந்தால், நான் 96 மணித்தியாலங்களே இருந்துள்ளேன். மின்சக்தி அமைச்சே தவறுக்கு காரணம் என்றால், செவ்வாய்க்கிழமையிலிருந்து நானல்ல மின்சக்தி அமைச்சிற்கு வேறு ஒருவர் அமைச்சராக இருப்பார். அவ்வாறான எடுத்துக்காட்டு இலங்கையில் முதற்தடவையாகப் பதிவாகும்
என டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.